×

இஸ்ரேலின் டெல் அவிவில் சாலையில் வக்கிரம்; ஐ.நா அதிகாரி காருக்குள் பாலியல் உறவு: சிவப்பு உடை அணிந்த பெண் குறித்து விசாரணை

ஜெருசலம்: ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வ காரில், பெண்ணுடன் பாலியல் தொடர்பில் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டின் முக்கியமான சாலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர், பெண் ஒருவருடன் காரின் பின் இருக்கையில் பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவில் சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஐ.நா அதிகராரி ஒருவர் சிவப்பு உடை அணிந்த பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். பின் இருக்கையில் அமர்ந்துள்ள அதிகாரியின் மடியில் சிவப்பு உடை பெண் அமர்ந்துள்ளார்.

அவர் அவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். 18 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சிகளை அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் ஒரு சில நாட்கள் கழித்து தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த வீடியோ கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த காரில் இருப்பவர்கள் ஒருமித்த உறவில் இருந்தார்களா? அல்லது அந்த பெண் பாலியல் தொழிலாளியா? என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஐ.நா அமைப்பின் அதிகாரப்பூர்வ காரில் இதுபோன்ற செயலில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐ.நா உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், ‘இந்த வீடியோ ஐ.நா-வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் வெறுக்கத்தக்கது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும். பாலியல் குற்றத்திற்கு எதிராக ஐ.நா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது’ என்றார். கடந்த 2019ம் ஆண்டில் மட்டும், ஐ.நா. ஊழியர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான 175 குற்றச்சாட்டுகள் இருந்ததாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அந்த குற்றச்சாட்டுகளில், 16 ஆதாரங்கள், 15 ஆதாரமற்றவை மற்றும் மற்ற அனைத்தும் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tags : road ,officer sex ,UN ,Israel ,Tel Aviv ,Investigation , Israel, UN official car, sex
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...