×

மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்: 300க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நெல்லி மலையிலிருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாசம்பாளையம் கிராமத்திலுள்ள சின்ராஜ், ராஜன், அக்கீம் என்பவர்களது தோட்டத்தில் புகுந்தது அங்கு பயிரிட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழை, தென்னை மரங்களையும் முறித்து சேதப்படுத்தியது. கடந்த ஒரு மாதமாக தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை வனத்துறையினர் விரட்டினால் பவானி ஆற்றை கடந்து செல்கிறது.

இரண்டு நாள் கழித்து மீண்டும் நெல்லி மலைக்கு வரும் இந்த ஒற்றை யானை அருகில் உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் தொடர்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Tags : garden ,Mettupalayam Mettupalayam ,Elephant Attacks , Mettupalayam, Elephant, Attakasam
× RELATED தேனி மாவட்டத்தில் சூறாவளிக்கு வாழைகள் நாசம்