×

குடிநீர் தட்டுப்பாட்டால் சமூக இடைவெளியை மறந்த மக்கள்

குன்னூர்: குன்னூர் காட்டேரி டேம் அருகே உள்ளது செலவிப் நகர். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமம் அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இங்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக நேற்று முன்தினம் இரவில் ஒருவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர். அவருக்கு ஊட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செல்விப் நகர் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்கு ஒரே ஒரு பொது குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. கூடுதலாக மற்றொரு பொது குடிநீர் குழாய் அமைத்து தர கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த கிராமத்தை கொரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று குடிநீர் விநியோகத்தின் போது, கிராம மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம்,கூட்டமாக நெருக்கியடித்துக் கொண்டு தண்ணீர் பிடித்து சென்றனர். இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து அதிகரட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கூடுதல் பொது குடிநீர் குழாய்களை விரைவில் அமைத்து நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drinking water, social space, people
× RELATED தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4...