×

அரசியல் கட்சிகள் போட்டியை மறந்து ஒண்றிணைந்து செயல்படவும்...! லடாக் எல்லை விவகாரத்தில் சிவசேனா கருத்து

டெல்லி: அரசியல் கட்சிகள் போட்டியை மறந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக ஒண்றிணைந்து பேச வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எல்லை விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் எல்லைப் பகுதியில் 43,000 கி.மீ நிலப்பரப்பு சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டதாக பாஜக தெரிவித்தது.

அதே போல் இந்திய நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளதாகவும், மத்திய அரசு உண்மையை மறைப்பதாகவும் காங்கிரஸ் கூறிவருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள போட்டியை மறந்து, சீனாவின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேச வேண்டிய நேரம் இது என சிவசேனா தெரிவித்துள்ளது. சீனாவிடம் இருந்து காங்கிரஸ் பணம் பெற்றது என்ற பாஜகவின் குற்றஞ்சாட்டு  குறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் எழுதியுள்ளது. அதில், ‘கல்வான் பள்ளத்தாக்கில் சீனா புதிய கட்டுமானத்தை தொடங்கியுள்ளது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் வழியாக சீன வீரர்கள் உள்ளே வருகிறார்கள். அதனால் அரசியல் கட்சிகள் போட்டியை மறந்து ஒன்றிணைவதற்கான நேரம் இது. சீனா தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவின் தலைவலியை அதிகரிக்கிறது. சீனா போரை விரும்பவில்லை. ஆனால் இந்தியாவை எல்லையில் போர் பதற்றத்தில் வைத்திருப்பதுதான் அதன் கொள்கை. சீனா தனது படைகளை கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து திரும்பப்பெற தயாராக உள்ளது. அதே நேரத்தில் லடாக்கின் டெப்சாங் பகுதியில் புதிய கூடாரங்களை நிறுவியுள்ளது. டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனா இந்தியா மீது போர் அச்சுறுத்தலை தக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ என சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : parties ,Ladakh ,Shiv Sena , Political Parties, Ladakh, Border Affairs, Shiv Sena
× RELATED ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது...