×

சேலம் தலைவாசலில் அமைக்கப்படும் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு!!!

சேலம்:  சேலம் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சேலத்தில் தலைவாசலில் சர்வதேச தளத்தில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழா கடந்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்றது. அங்கு சுமார் 1100 ஏக்கரில் ரூ.1000 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பூங்கா 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.  

இதனைத்தொடர்ந்து, கறவை மாட்டு பண்ணை, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய மாட்டு இனங்களின் இனப்பெருக்க பண்ணை மற்றும் ராஜபாளையம், சிப்பிபாறைக்கன்னி ஆகிய நாட்டு நாய்களின் இனப்பெருக்க பிரிவுகளை உள்ளடக்கிய கால்நடை பண்ணைகளையும் உருவாக்கியுள்ளனர். மேலும், இந்த பூங்காவின் தேவைக்கு மேட்டூர் அணையிலிருந்து ரூ.262 கோடியில் தண்ணீர் கொண்டுவரும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழக முதல்வர் மேட்டுப்பட்டியில் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அதாவது, ரூ.19 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் ஆத்தூர், நரசிங்கபுர நகராட்சிகள், அயோத்தியாபட்டணம், வாழப்பாடி,பெத்தநாயக்கம்பாளையம், ஆகிய பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டமானது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் இந்த விழாவினை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்தார்.

Tags : headquarters ,livestock park ,Salem , Salem, Headquarters, Livestock Park, CM
× RELATED அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது செயற்குழு