×

வெளிமாநிலத்தவர்களின் வருகையால் தான் தமிழக்த்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள கொரோனா மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தவரின் வருகையால்தான் தொற்று அதிகரித்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். உலக அளவில் வேகம் குறையாத கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இதுவரை 5 லட்சம் பேரை இந்த வைரஸ் பலி கொண்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த 6 மாதமாக உலகையே போட்டு புரட்டிக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே வேகம் குறையாத கொலைகார கொரோனாவால் உலக அளவில் நாள்தோறும் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடி என்ற புதிய பயங்கர உச்சத்தை எட்டி உள்ளது.  இந்திய நேரப்படி நேற்றிரவு உலகளவில் பாதிப்பு 99 லட்சத்து 50 ஆயிரமாக இந்த நிலையில், நள்ளிரவில் ஒரு கோடியை தொட்டுள்ளது. இதே போல், பலி எண்ணிக்கையும் 5 லட்சத்தை எட்டி உள்ளது. தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய 4 நாடுகளில் பாதிப்பு படுதீவிரமாக அதிகரித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,953-லிருந்து 5,28,859-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,685-லிருந்து 16,095-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881-லிருந்து 3,09,713-ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் கொரோனா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சாலையில் செல்வோருக்கெல்லாம் பரிசோதனை செய்ய முடியுமா? என வினவியுள்ளார்.

பின்னர், வெளிநாடுகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து பயணம் செய்யும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தவர்களால்தான் அதிகளவு கொரோனா இந்தியாவில் பரப்பப்படுகிறது என்றார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரையில் அனைத்துமே கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், பொருளாதாரரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதை தொடர்ந்து ஊரடங்கை தளர்த்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சமீபகாலமாக வெளிநாட்டினவரின் வருகையால்தான் மதுரை மாநகராட்சி மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமான பரவி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Selur Raju ,foreigners ,Tamil Nadu , Externalists, Corona, Minister Selur Raju
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...