×

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா முதலிடம்: மத்திய வேளாண்துறை அமைச்சகம் அறிவிப்பு!!!

பாலைவன வெட்டுக்கிளிகளை ட்ரோன்கள் மூலம் கட்டுப்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக அதிக வளங்களில் பாதிப்பு ஏற்படுத்திய ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன்கள் மூலம் அதிகளவு வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் உருவாக்கம்:

அதாவது, வெட்டுக்கிளிகள் என்பவை படையாக உருவாகி பயிர்களைச் சேதப்படுத்தும் ஒரு வகை பூச்சி. இவற்றின் ஆயுட்காலம் 6 முதல் எட்டு வாரங்களாகும். இதற்குள் மூன்று முறை இவை முட்டையிடுகின்றன. அறுவடைக்குத் தயாராக உள்ள வேளாண் பரப்பு எங்குள்ளது என்பதை காற்றின் மூலம் அறிந்து அந்தத் திசையில் இவை படையெடுக்கும் திறனுடையவை. பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இவை 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்குச் சமமாகும். கென்யா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவிற்கு படையெடுத்துள்ளன.

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்ட இழப்பு:

வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். 2019ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் அதிகாரிகள்:

குறிப்பாக அதிக வளங்களில் பாதிப்பு ஏற்படுத்திய ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன்கள் மூலம் அதிகளவு வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டதாககூறப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான், அரியானா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாநில வேளாண் துறையின் குழுக்கள், உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் மத்திய வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் அதிகாரிகளும் இணைந்து வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தவிர பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை முற்றிலுமாக அழிக்க ராஜஸ்தான் மாநில குழுக்கள், தற்போது அரியானா மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் மத்திய வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.

Tags : India ,Ministry of Agriculture India , Locust, India, Ministry of Agriculture
× RELATED இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்