×

மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு: மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

* பொதுமக்களை போலீசார் அடிப்பது மிகவும் தவறான செயல்
* மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு
* இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: தளர்வில்லாத ஊரடங்கு சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என சென்னையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வாகனம், பொதுமக்கள் அனுமதி அளிக்கப்படு வருகிறது என தெரிவித்தார். போலி இ-பாஸ் பயன்படுத்தி சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என கூறினார். மேலும் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

வாகன சோனையில் 52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போலீஸ் பொதுமக்களை அடிப்பது மிகவும் தவறான செயல் எனவும் கூறினார். மக்களை தாக்கக்கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம் என கூறினார். மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு எனவும் செய்தியாளர்கள் பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் யாருடைய மனதை புன்படுத்துவது போல் பேசக்கூடாது எனவும் காவல்துறையினருக்கு கூறியுள்ளோம் என கூறினார். மேலும் பொதுமக்களை தவறான முறையில் கையால கூடாது என அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். காவலர்கள் யாருக்கும் உடல்நிலை சிறிது அளவு சரியில்லை என்றாலும் அவர்கள் பணிக்கு வரவேண்டாம் எனவும், அவர்கள் வீட்டிலேயே ஒய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என கூறினார். எனவே கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அவர்கள் பூரண குணமடைந்த பின்பு தான் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் விலியுறுத்தியுள்ளோம் என பேசினார். 


Tags : AK Viswanathan , Interview,Municipal Police Inspector, AK Viswanathan
× RELATED சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு...