×

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு; அதிகபட்மாக ராயபுரம் மண்டலத்தில் 7,455 பேர் பாதிப்பு; இதுவரை 776 பேர் பலி..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள்  திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக,  ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,400ஐ தாண்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 51,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 31,045  பேர் குணமடைந்துள்ளனர். 776 பேர் உயிரிழந்துள்ளனர். 19,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1398 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.11 சதவீதம், பெண்கள் 39.89 சதவீதம்.

சென்னையில் மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 7,455 பேர், தண்டையார்பேட்டையில் 6,221 பேர்,  தேனாம்பேட்டையில் 5,758 9 பேர், கோடம்பாக்கத்தில் 5,432 பேர், அண்ணாநகரில் 5,506 பேர், திருவிக நகரில் 4,387 பேர், அடையாறில் 3,202 பேர், வளசரவாக்கத்தில் 2,310 பேர், திருவொற்றியூரில் 2,019 பேர்,  அம்பத்தூரில் 2120 பேர், மாதவரத்தில் 1,655 பேர், ஆலந்தூரில் 1,300 பேர், பெருங்குடியில் 967 பேர், சோழிங்கநல்லூரில் 1,101 பேர், மணலியில் 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : release ,Zone-wise ,Corona Impact Detection ,Chennai ,Raipur ,Corona Impact Detection Release , Zone-wise Corona Impact Detection release in Chennai; 7,455 affected in Raipur sector; 776 killed so far;
× RELATED தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத...