×

முதன்முறையாக ஒரே நாளில் 19,906 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.23 லட்சத்தை தாண்டியது; 16,095 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி   வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,906 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 410 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 16,095 பேர் உயிரிழந்த நிலையில் 3,09,713 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7273 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 84,245 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு  முன்னேறியுள்ளது. டெல்லியில் 80,188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,558 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 49,301 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 78,335 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1025 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 44,094 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்  கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 6816 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 4500 பேர் குணமடைந்தது.
பீகாரில் 8931 பேருக்கு பாதிப்பு; 59 பேர் பலி; 6843 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 428 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 335 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 2545 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 1914 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1128 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 420 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 30,709 பேருக்கு பாதிப்பு; 1,789 பேர் பலி; 22,409 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 13,427 பேருக்கு பாதிப்பு; 218 பேர் பலி; 8472 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,334 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1071 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 4071 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 2110 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 16,944 பேருக்கு பாதிப்பு; 391 பேர் பலி; 13,367 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,339 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 1,724 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 960 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 554 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1092 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 432 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 47 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 148 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 55 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 387 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 164 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 6,350 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 4606 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 619 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 221 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 5056 பேருக்கு பாதிப்பு; 128 பேர் பலி; 3,320 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2,791 பேருக்கு பாதிப்பு; 37 பேர் பலி; 1,912 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 11,923 பேருக்கு பாதிப்பு; 191 பேர் பலி; 7287 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 6,966 பேருக்கு பாதிப்பு; 93 பேர் பலி; 4,225 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 13,436 பேருக்கு பாதிப்பு; 243 பேர் பலி; 4,928 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 16,711 பேருக்கு பாதிப்பு; 629 பேர் பலி; 10,789 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 21,549 பேருக்கு பாதிப்பு; 649 பேர் பலி; 14,215 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 12,285 பேருக்கு பாதிப்பு; 157 பேர் பலி; 5,480 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 177 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 12,965 பேருக்கு பாதிப்பு; 550 பேர் பலி; 9,971 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 894 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 509 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 72 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 177 பேருக்கு பாதிப்பு; 55 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 87 பேருக்கு பாதிப்பு; 46 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : victims ,time ,India , 19,906 victims affected for the first time in a single day; Coronavirus in India exceeds 5.23 lakh; 16,095 people killed
× RELATED மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான...