×

6-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; கொரோனா காலத்தில் இன்று 4-வது முறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..!!

டெல்லி: ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 4-வது முறையாக பிரதமர் மோடி இன்று மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன்   உரையாற்றும் வகையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி  தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு   செய்யப்பட்டது. தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

அப்போது, முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர்  மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியை 2019 ஜூன் 30-ம் தேதி மீண்டும் தொடங்கினார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணிக்கு மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்  4-வது முறையாக மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும், பிரதமராக 2 முறை நரேந்திர மோடி பதவியேற்று இன்று 12-வது மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்ததது.

இன்றைய உரையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மற்றும் 6-ம் கட்ட ஊரடங்கு குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஊரடங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும், கட்டுப்பாடுகள் தளர்வு எவ்வாறு  பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உரையாற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஊரடங்கின்போது, தன்னார்வலர்களை கவூரவிக்கும் விதமாக பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

கடந்த மே 31-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் முடிதிருத்தகம் நடத்தி வரும் இவர், தனது மகளின் படிப்பு, திருமணத்துக்காக சேமித்த ரூ.5 லட்சத்தை கொரோனா காலக்கட்டத்தில்  ஏழைகளுக்காக செலவு செய்துள்ளார். இவரைப் போல, அகர்தலா கவுதம் தாஸ், பதான்கோட் மாற்றுத் திறனாளியான ராஜு, நாஷிக் ராஜேந்திர பிரசாத் போன்றவர்களும் உதவி உள்ளனர். இவர்களை பாராட்டி, தலை வணங்குகிறேன்,’’ என்றார்.  இதைதொடர்ந்து மோகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்தனர். அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது. தொடர்ந்து, நேத்ராவை United Nations Association for Development and  Peace (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நியமனம் செய்யப்பட்டார்.


Tags : Modi , Opportunity to talk about the 6th curfew; Prime Minister Modi addresses Mann Ki Baat
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...