×

குறைதீர் மனுக்கள் இணையத்தில் பதிவேற்றம்: செங்கை கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: ஜமாபந்தி குறைதீர் மனுக்களை பதிவேற்றம் செய்வது குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட  செங்கல்பட்டு மாவட்டத்தில் 1429ல் பசலிக்கான வருவாய் தீர்வாய்க் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி  மனுக்கள் அனைத்து வட்டங்களும் நாளை முதல் ஜூலை 15ம் தேதி  வரை நடைபெறும். பொது மக்கள் மேற்கண்ட தினங்களில் இ  சேவைமையங்கள் அல்லது http://gdp.tn.gov.in/ jamabandhi  என்ற இணையம் மூலமாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின்படி முக கவசம் அணிந்து, சமுக இடைவெளி யுடன் தங்களது குறைதீர் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். வருவாய் தீர்வாயம் நடைபெறும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டாம். சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வு செய்த பின், மனுதாரருக்கு இணையதளம் வழியாகவே பதில் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Tags : The Senge Collector , Petitions, internet, brick collector
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...