×

கெமிக்கல் கம்பெனியில் திடீர் தீ

புழல்: செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை அருகில் உள்ள ஜமுனா நகர். இங்கு தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. ஊரடங்கால்  ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை. காவலாளி மட்டுமே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் இந்த கெமிக்கல் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் அங்கிருந்த கெமிக்கல் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் கிரான்ட்லைன், வடகரை, வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்  புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரிக்கின்றனர். மற்றொரு சம்பவம்:  கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (37). காட்டுக்கொள்ளைத் தெருவில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். ஊரடங்கால் கடையை மூடி வைத்திருந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி, சிப்காட் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில்   அங்கிருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது.


Tags : fire ,Chemical Company ,Company , fire ,Chemical Company
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...