×

நாளை முதல் ஜூலை 15ம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: நாளை முதல் ஜூலை 15ம் தேதி வரை தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசின் வேண்டுகோளின்படி இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை முதல் ஜூலை 15ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி - செங்கல்பட்டு (02606/02605), மதுரை-விழுப்புரம்((02636/02635), கோவை-காட்பாடி ((02680/02679), திருச்சி- செங்கல்பட்டு(06796/06795), அரக்கோணம்- கோவை (02675/02676) கோவை- மயிலாடுதுறை (02083/02084), திருச்சி- நாகர்கோவில்(02627/02628) ஆகிய சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட இந்த நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.

 இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும். டிக்கெட் கவுன்டர்களின் முன்பதிவு செய்தவர்கள் 6 மாத்துக்குள் இதற்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். சென்னை சென்ட்ரல் மற்றும் புதுடெல்லிக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி சிறப்பு ரயில் (02243/02244) அட்டவணைப்படி இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu Special trains canceled
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...