×

வாலாஜா அருகே நாட்டு ெவடிகுண்டு வெடித்ததில் வீடு இடிந்து விழுந்து வாலிபர் பலி: பெண் உட்பட 5 பேர் படுகாயம்

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அணைக்கட்டு ரோடு மேம்பாலம் அருகே நரிக்குறவர் காலனி உள்ளது. இங்குள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேட்டையடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி உரிமம் பெற்று பயன்படுத்தி வந்தனர். இங்கு தமிழன்(36) என்பவரும் வசித்து வருகிறார். இவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் இருந்த நாட்டு வெடி குண்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.  இதில் தமிழனின் வீட்டு மேற்கூரை தூக்கி எறியப்பட்டு வீடு தரைமட்டமானது. மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தது.

மேற்கூரை தூக்கி வீசப்பட்டதில் வீட்டின் வெளியில் நின்று ெகாண்டு இருந்த தமிழன்(36) மற்றும் உழைப்பாளி(25), விஜய்(20), எஜமான்(30), வேதவள்ளி(21), இவரது கணவர் சின்னப்பா(30) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் உழைப்பாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.Tags : Walaja, Land Bomb, Volleyball Kills, Woman, 5 People injured
× RELATED விலை உயர்ந்த கார்களை ஏமாற்றி விற்ற பெண் கைது