×

கொரோனா பரிசோதனையில் மருத்துவர்களுக்கு உதவ ஸ்வாப் டெஸ்ட் செய்யும் ரோபோ கண்டுபிடிப்பு

கோவை:  கொரோனா பரிசோதனைக்காக மக்களிடம் இருந்து சளி மாதிரிகளை எடுக்கும் ஸ்வாப் டெஸ்ட் செய்ய கோவை இளைஞர் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வேலாயுதம் (30). பொறியியல் பட்டதாரி. தனது கண்டுபிடிப்பு குறித்து கார்த்திக் வேலாயுதம் கூறியதாவது: இந்த ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலமாக சளி மாதிரிகளை சேகரிக்க கைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ரோபோ வெறும் ரூ.2 ஆயிரம் ரூபாய் மதிப்புடையது. ரோபோவில் ஒரு மொபைல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைல் மாதிரிகளை சேகரிக்க வரும் மக்கள் எப்படி அமர வேண்டும் என்பது உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை கொடுக்கும். இந்த மொபைல் வீடியோ கால் மூலம் மாதிரி எடுப்பவரிடம் பேச முடியும். மாதிரி எடுக்க 2 நிமிடம் எடுக்கும். ஒருவருக்கு மாதிரி சேகரிக்கப்பட்ட பிறகு மற்றொருவருக்கு பாதுகாப்பாக பரிசோதனை  செய்யும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றார்.



Tags : doctors ,testing ,Corona ,Corporal , Corona, Doctors, Swap Test, Robot
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...