×

நீட் மோசடி வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை:   நீட் தேர்வில் நடந்த மோசடி வழக்கில் இருவருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை மோசடியாக எழுதிய பலர் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மோசடியாக சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர்.  

இந்த வழக்கில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்த வேதாச்சலம் என்பவரும், தத்தாரகள்ளியைச் சேர்ந்த மனோகரன் என்பவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டீக்கா ராமன் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தலா ரூ.50 ஆயிரத்தை டெபாசிட் செய்யவேண்டும்.  இருவரும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் இரு வாரங்களுக்கு தினசரி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Neat fraud, conditional bail
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...