×

ஜனநாயகத்தை பற்றி பாஜ பேசுவதா?: நிர்மலா சீதாராமனுக்கு திமுக வர்த்தகர் அணி கண்டனம்

சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசும்போது,‘‘ 40 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை கண்டித்த காங்கிரசுடன் இணைந்து திமுக ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது. எமர்ஜென்சியை கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்தது காங்கிரஸ்’’ என்று பொங்கியுள்ளார். அந்த நிகழ்வுக்காக இந்திராகாந்தி மன்னிப்பு கேட்ட பின்பு தான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக, நீண்ட இழுபறிக்கு பின் மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பின்பு தானே கடிதம் தந்தது. அது கூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜ ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்தது.

அத்வானிக்கு, செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது என்று ஜெயலலிதா கூறினாரே. அதன் பின் எந்த கட்டத்திலாவது மன்னிப்பு கேட்டதா அதிமுக. எந்த அதிமுக, வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததோ அதே அதிமுக உடன் 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?.  தேசத்திற்காக இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மரணமடைந்த பின்பு இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம். ஒன்றிரண்டு பெற்றால் கூட ஆட்சி என அலையும் பாக, மற்ற கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து ராஜ்யசபா உறுப்பினர்களை பெற்றிடும் பாஜ ஜனநாயகத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.  எங்களை வழி நடத்திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Baja ,Nirmala Sitharaman ,DMK ,traders ,BJP , Democracy, BJP, Nirmala Sitharaman, DMK Merchant Team
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...