×

கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன் சித்ரவதை சாப்ட்வேர் பெண் ஊழியர் தற்கொலை: வளர்ப்பு நாயின் நன்றி உணர்வு வீணானது

திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம்  மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் ஐதராபாத் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் ஐதராபாத் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட் வெங்கடேஷ் என்பவரும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த சில  ஆண்டுகளாக  வெங்கடேஷ் சென்னை  விமான நிலையத்தில் பணிபுரியும்  பெண் ஊழியருடன்  கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தடையாக இருந்த லாவண்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதற்காக, குழந்தை இல்லை எனக் கூறி லாவண்யாவிடம், வெங்கடேஷ் தகராறு செய்தும், வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தி வந்தாராம். இந்நிலையில், கடந்த 25ம் தேதி லாவண்யா  தனது  வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். முன்னதாக, லாவண்யா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘வெங்கடேஷை நான் காலித்து திருமணம் செய்து கொண்டேன். அதனால், அவர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் தாங்கிக் கொண்டேன்.

ஆனால், அவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு, தினமும் அப்பெண்ணுடன் வீடியோ காலில் பேசியபடி  சுற்றி வருகிறார்.  உனக்கு சமைத்து போடுவதற்கும், நீ வேறு ஒரு பெண்ணுடன் சுற்றி வரக்கூடிய உனது ஆடைகளை துவைத்து போடுவதற்கு மட்டும் நான். எதற்கு நான் வாழ வேண்டும். நீ செய்த பாவமே உனக்கு தண்டனை கிடைக்க செய்யும்,’ என கூறி உள்ளார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் தனது கைகளைப் பின்னால் கட்டி வைத்து வயிற்றில் அடித்து துன்புறுத்தினார். அப்போது தனது வளர்ப்பு நாய் தடுத்ததாக கூறி அதன் சிசிடிவி காட்சிகளை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஷம்ஷாபாத் போலீஸ் துணை ஆணையாளர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேஷை கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.Tags : Suicidal Woman Suicide: Foster Dog , Counterfeit, husband, software female employee, suicide, foster dog
× RELATED தூத்துக்குடி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து பெண் படுகொலை