×

கொரோனா வார்டில் இதுவரை நடந்த தற்கொலை

* ஸ்டான்லி மருத்துவமனை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர்.
* ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 57 வயது நபர்.
* திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது நபர்.
* புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று
வந்த 54 வயது நபர்.
* அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர்.
* இதுதாங்க ‘தனிமைப்படுத்துதல்’ ஒரே ஒரு பயணியுடன் வந்த கொல்கத்தா சிறப்பு விமானம்

சென்னை: கொல்கத்தாவில் இருந்து ஒரே ஒரு பயணியுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் சென்னை வந்தது. கொரோனா ஊரடங்கால் சிங்கப்பூரில் சிக்கி தவித்த 145 இந்தியர்களுடன் ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம், சிங்கப்பூரில் இருந்து கொல்கத்தா வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை வரவேற்க அரசு அதிகாரிகள், மருத்துவ குழுவினர், குடியுரிமை, சுங்க துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் வந்ததும் பயணிகள் இறங்கி விமான நிலையத்திற்குள் வருவதற்கான ஏரோபிரிட்ஜ், விமானத்துடன் இணைக்கப்பட்டு, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமானத்தில் இருந்து ஒரே ஒரு பயணி மட்டுமே இறங்கினார். அவர் சென்னையை சேர்ந்த சுமார் 40 வயதுடைய ஆண். அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது, ‘சிங்கப்பூரில் இருந்து 145 பேர் வந்தோம். கொல்கத்தாவில் 144 பேர் இறங்கி விட்டனர்.

நான் மட்டும்தான் சென்னை வந்தேன்’ என்றார். இதையடுத்து அந்த பயணியை வரவேற்று, குடியுரிமை, சுங்க சோதனை, மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து, அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பினர். இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ‘விமானத்தில் வந்த பயணிகளில் 130 பேர் கொல்கத்தாவில் இறங்கி விட்டு 15 பேர் சென்னை வருவதாக தகவல் கிடைத்தது. ஆனால் 144 பேர் கொல்கத்தாவில் இறங்கிவிட்டனர். ஒருவர் மட்டுமே வருவது இப்போதுதான் தெரிந்தது’ என்றனர்.


Tags : Corona Ward , Corona Ward, suicide
× RELATED கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா...