×

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் கொலை சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பில் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மாநில அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

கொல்லப்பட்டவர்களுக்குக் கொடுங்காயங்கள் இருந்தபோதிலும், அவர்களைக் காவல் அடைப்பு செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை வெகு தூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை, மருத்துவர்கள் அவர்களை சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியுள்ளமை மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் கொடுங் காயங்களைக் குறித்துக்கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து  ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : merchants ,Sitaram Yechury ,killing ,Satan , Satanagulam, murder of merchants, Sitaram Yechury
× RELATED திமுக நடத்தும் சமூக நீதிக்கான...