×

குடல்புண் நோயால் பாதிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி சாவு

மேட்டூர்: மேட்டூர் வனச்சரகத்திற்குட்பட்ட பச்சைப்பாளி ஓடை பகுதியில், கடந்த சில நாட்களாக 6 வயதுடைய ஆண் யானை நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் விழுந்து கிடந்தது. இதுகுறித்த தவலின்பேரில், மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு விரைந்தனர். பின்னர், யானையை மீட்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த இரு நாட்களாக சிகிச்சையளித்து வந்தனர். குடல்புண் நோயால் அவதிப்பட்ட யானைக்கு தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் அளிக்கப்பட்டது. ஆனாலும், யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று மதியம் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் வனப் பகுதியிலேயே, கால்நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அங்கேயே புதைக்கப்பட்டது.


Tags : Smallpox, elephant, death without treatment
× RELATED சிகிச்சை பலனின்றி மின் ஊழியர் பரிதாப பலி