×

மத்திய அரசின் அவசர சட்டத்தால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும்: பாலகிருஷ்ணன் பேட்டி

சிதம்பரம்: விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம் நாடு முழுவதும் நேற்று துவங்கியது. சிதம்பரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசின் அவசர சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு சென்றால் இதிலுள்ள நான்கே முக்கால் லட்சம் கோடி வைப்புத் தொகை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு போகும். இதனால் விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Tags : government , Central Government, Agriculture, Balakrishnan
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்