×

இறப்பில் 87% பாதிப்பில் 85%: தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் ஆதிக்கம்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 85.5 சதவீதமும், மொத்த பலியானோர் எண்ணிக்கையில் 87 சதவீதமும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களின் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 5,08,953 ஆக உள்ளது. இதில் 85.5 சதவீதம் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொரோனாவுக்கு இதுவரை 15,685 பேர் இறந்துள்ளனர். இதிலும், இந்த 8 மாநிலங்களில் மட்டுமே 87 சதவீதம் உள்ளன. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் 18,552 பேர் பாதித்துள்ளனர்.

இதையடுத்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 384 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 175, டெல்லியில் 63, தமிழ்நாட்டில் 46, உத்தர பிரதேசத்தில் 19,   குஜராத்தில் 18, அரியானாவில் 13, ஆந்திராவில் 12, மேற்கு வங்கம், கர்நாடகாவில் தலா 10, தெலங்கானாவில் 7, மத்திய பிரதேசத்தில் 4,  பஞ்சாபில் 2,  ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர், பீகார், உத்தரகாண்டில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டு 1,97,387 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதே நேரம் 2,95,880 பேர் குணமாகி உள்ளனர். இதனால், குணமடைந்தோரின் சதவீதம் 58.13 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : deaths ,states ,Tamil Nadu , Death, Tamil Nadu, 8 States, Corona
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து