×

நாலு வார்த்தை சேர்த்து பேசத் தெரியாத பிடென்தான் அடுத்த அமெரிக்க அதிபர்!

* டிரம்ப் திடீர் ஒப்புதல்
* செல்வாக்கு கடும் சரிவு

வாஷிங்டன்: ‘ நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசத் தெரியாதவர் அமெரிக்க அதிபராக வரப்போகிறார்,’ என்று அதிபர் டிரம்ப் விரக்தியுடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப், கடந்த முறை ஒபாமாவை தோற்கடித்து இப்பதவிக்கு வந்தார். அவர், 2வது முறையாகவும் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், இதில் அவர் வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. மக்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் அவருடைய செல்வாக்கு கடுமையாக சரிந்திருப்பது உறுதியாகிறது.  டிரம்ப்புக்கு வயது 74. அவரை விட மூன்று வயது மூத்தவர் பிடென். ஆனால், நிதானமாக பேசக் கூடியவர். திறமையானவர் என்று மக்களிடம் பெயர் பெற்று விட்டார். இந்நிலையில், ‘பாக்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டி வருமாறு:

நான் மக்களுக்கு நூறு சதவீதம் பிடித்தவனாகவோ, பிடிக்காதவனாகவோ இருக்கவில்லை; அப்படி தான் இருப்பேன். எப்போதும் என்னை மக்கள் விரும்ப வேண்டும் என்று நினைக்க மாட்டேன். என்னை ஏனோ சிலருக்கு பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் நல்லவை. மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. ஆனாலும், சிலருக்கு என் மீதான அன்பு போய் விட்டது. பிடென் தான் அடுத்த அதிபர். நான் என் வேலையைதான் இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். என் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. பிடென், அடுத்த அதிபராக வந்து அமரட்டும்; நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசக்கூட தெரியாது. இவரை மக்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

‘கடைசி நேரத்தில் ஏதாவது செய்வார்’
பிடென் செல்வாக்கு அதிகரித்து இருப்பதால், தனது தோல்வி ஒப்புக்கொள்வது போல் டிரம்ப் பேசியது, அவருடைய ஆதரவாளர்களை குழப்பி இருக்கிறது. அவருடைய பேச்சு கிண்டல் தொணிக்கிற மாதிரி இருப்பதால், ‘டிரம்ப் கடைசி நேரத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க ஏதோ செய்யப் போகிறார்,’ என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

டிரம்ப்புக்கு 50% ஆதரவு: இந்தியர்களுக்கு நன்றி
அமெரிக்கர்கள் மத்தியில் டிரம்ப் செல்வாக்கு சரிந்த போதிலும், அமெரிக்கவாழ் இந்தியர்கள் அவருக்கு ஆதரவாகவே உள்ளனர். அல் மேசன் நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 50% பேர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு டிரம்ப் நன்றி கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்திய வம்சாவளிகளும், இந்திய மக்களும் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளதற்கு அதிபர் டிரம்ப் நன்றி கூறியுள்ளார்,’’ என்றார்.

தொடர்ந்து சரிவு
* அமெரிக்காவின் பிரபல என்பிஆர், பிபிஎஸ், மேரிஸ்ட் மற்றும் நியூஸ்ஹவர் ஆகிய ஏஜென்சிக்கள் எடுத்த கருத்து கணிப்பில் 58 சதவீதம் டிரம்ப்புக்கு எதிராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
* பாக்ஸ் டிவி பேட்டியில் டிரம்ப், நான் மக்களுக்கு நல்லது தான் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறியதற்கு, ‘டிரம்ப் ஒன்றுமே செய்யவில்லை,’ என்று 49 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
* இப்போதுள்ள நிலையில், டிரம்ப் செல்வாக்கு 40 சதவீதத்துக்கு சரிந்து விட்டது.



Tags : Biden ,US , Four words, Biden, US President!
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...