×

கர்தார்பூர் பாதை திறப்பு: பாகிஸ்தான் முடிவை நிராகரித்தது இந்தியா

இஸ்லாமாபாத்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபாநானக் குருத்வாராவையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் நான்கு கிலோமீட்டர் நீள புதிய பாதை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக,  கடந்த மார்ச் மாதம் தனது பகுதியில் உள்ள இந்த சாலையை பாகிஸ்தான் மூடியது.
இந்நிலையில், மகாராஜா ரஞ்சீத் சிங் நினைவு தினத்தையொட்டி கர்தார்பூர் வழித்தட சாலையை மீண்டும் திறப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் முகமது குரேஷி தனது டிவிட்டர் பதிவில், “உலகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருவதால் அனைத்து சீக்கிய யாத்ரீகர்களும் பயன்பெறும் வகையில் கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகின்றது. மகாராஜா ரஞ்சீத் சிங் நினைவு நாளாக ஜூன் 29ம் தேதி, இந்தியா ஒத்துழைத்தால் இந்த பாதையை திறக்க தயாராக இருக்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார். ஆனால்,  பாகிஸ்தானின் இந்த திட்டத்தை இந்தியா நேற்று இரவு நிராகரித்தது.

Tags : India ,Pakistani , Gardarpur, Road Opening, Pakistan, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...