×

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

* கொரோனா ஊரடங்கை தொடர்ந்து மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடப்பட்டன.
* ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
* இதற்கு பலத்த எதிர்ப்பு மற்றும் கோர்ட்டில் வழக்கு வரவே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது.
* 11ம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

குமாரபாளையம்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியமில்லை  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில்  பன்னாட்டு ரோட்டரி சங்க விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி,  கருப்பண்ணன், சரோஜாஆகியோர்  பங்கேற்று பேசினர். பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் மூலம் சுமார் 4 கோடி  மதிப்பிலான இருக்கைகள், படுக்கைகள், கிருமிநாசினி தெளிப்பான்கள்,  மானிட்டர்கள், பள்ளிகளுக்கான பெஞ்ச் -டெஸ்குகள், நூலகத்திற்கான பீரோக்கள்  போன்றவை வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘தற்போதைய சூழ்நிலையில்  தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை. சூழ்நிலை மாறினால்  கல்வியாளர்கள், பெற்றோர்களை கலந்தாலோசித்து, பள்ளிகளை திறக்க முதலமைச்சர்  முடிவெடுப்பார். பள்ளிகளில் இணைய வழி பாடங்கள் எடுப்பது குறித்து  முதலமைச்சரிடம் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் கலந்து பேசி அது  குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்,’ என்றார்.

Tags : Opening schools ,Senkotayan ,Tamil Nadu ,Schools ,Minister Senkotayan , Tamil Nadu, Schools, Minister Senkottaiyan
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...