×

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஏன் அதிகமாகுது?.. அதிகாரியை நாற்காலியால் தாக்க முயற்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று ஏன் அதிகமாகுது? எனக்கூறி அதிகாரியை நாற்காலியால் தாக்க முயன்ற நவநிர்மாண் சேனா கட்சியின் மாவட்ட செயலாளர் சுகாஷ் தேஷ்ரேத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கில் புதிய தொற்றுகள் அங்கு கண்டறியப்பட்டு வருகின்றன. அதபோல் இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சியாக உள்ள மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், அவுரங்காபாத் நகரில் பேரணியாக சென்ற நவநிர்மாண் சேனா கட்சியின் மாவட்ட செயலாளர் சுகாஷ் தேஷ்ரேத், மாநகராட்சி இணை ஆணையரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது, ‘ஏன் தினமும் புதிய கொரோனா தொற்றுகள் அதிகமாக வருகின்றன? ஒரு வாரத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று அவர் கோபமாக பேசினார். அதற்கு இணை ஆணையர் அமைதியாக பதிலளிக்க, திடீரென கோபமடைந்த சுகாஷ் தேஷ்ரேத் அங்கிருந்த நாற்காலியை தூக்கி அதிகாரியை தாக்க முயற்சித்தார்.

அங்கிருந்த போலீசார் சுகாஷை தடுத்து, எச்சரித்து அனுப்பினர். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக் நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் நாற்காலியை தூக்கி அதிகாரியை தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

Tags : Corona ,Maharashtra , Maharashtra, chair, trying to attack
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...