×

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் மரணம் - நீதிபதி நேரில் விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கோவில்பட்டி கிளைச்சிறையில் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்துகிறார். ஏற்கனவே நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிபதி ஹேமா விசாரணை நடத்துகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன்கடை வைத்திருந்த பென்னிக்ஸ்  ஊரடங்கின்போது கடையை திறந்து வைத்திருந்ததாக அவரையும் அவரது தந்தை ஜெயராஜையும் சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஊரடங்கை மீறியதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறையில் இருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இறந்தனர். இந்த மரணம் சாத்தான்குளம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக 2 எஸ்ஐகள், தலைமைக் காவலர், கான்ஸ்டபிள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிபதி ஹேமா விசாரணை நடத்துகிறார்.



Tags : death ,branch ,Kovilpatti , Father, son, death, judge, investigation
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி