×

நாட்டின் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புள்ளதால் ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க..! அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு அறிவுரை

வாஷிங்டன்: நாட்டின் ரகசியங்கள் வெளியாவதால் ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ விஷயத்தல எச்சரிக்கையாக இருக்கும்படி, அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடா நாடான பஹ்ரைனுக்குப் புறப்படும் மாலுமிகளுக்கு தீவின் பல பாலியல் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க கடற்படை பயிற்சி வீடியோ எச்சரிக்கிறது, ஏனெனில் அவர்கள் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து பெறக்கூடிய எந்த தகவலையும் விற்க முயற்சிப்பார்கள். அமெரிக்க நாட்டின் ஐந்தாவது கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ள மனாமாவின் பஹ்ரைன் தலைநகரில் சுமார் 8,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக பணிக்கு வந்துள்ள வீரர்களுக்கு கடற்படை பயிற்சி அதிகாரிகள் தரப்பில் சில அறிவுரைகள் வீடியோ மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதில், ‘நீங்கள் (கடற்படை வீரர்கள்) எதிர்கொள்ளும் பல ஆபத்துகளில் ஒன்றாக பாலியல் வர்த்தகம், அந்த தீவில் அதிகமாக உள்ளது. அங்குள்ள பாலியல் தொழிலாளர்கள் (பெண் செக்ஸ் ஒர்க்கர்ஸ்), தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரகசியமான தகவல்களை பெற்று, அதனை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வார்கள். உங்களது வேலை என்ன? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தேவை? கப்பலின் செயல்பாடுகள், கப்பல் வருகை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

அந்த தகவல்கள் அவர்களுக்கு உண்மையில் தேவையில்லை என்றாலும், அவர்கள் அந்த தகவலை பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், அதிக பணம் சம்பாதிக்கவும் இந்த உளவு வேலைகளை செய்வார்கள். ஒவ்வொரு 12 முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நீங்கள் பணியமர்த்தப் படுகின்றீர்கள். அதனால், புது முகங்களை செக்ஸ் ஒர்க்கர்ஸ் மடக்க முயல்வார்கள். அதனால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ேமற்கண்ட கடற்படை தளத்தில் பணியாற்றிய சில மாலுமிகள், தீவில் உள்ள செக்ஸ் ஒர்க்கர்ஸ் வலையில் சிக்கி அமெரிக்காவின் ரகசியங்களை கசியவிட்டதாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் அமெரிக்காவில் விசாரணையில் உள்ளது. தற்போது அதனை தடுக்கும் வகையில் இந்த எச்சரிக்கை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Tags : sex workers ,country ,US Marines , Sex Workers, Warning, US Navy
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...