×

வருசநாடு அருகே கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே சிறுகுளம் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கண்மாயை தூர்வாரும் பணி துவங்கி நடந்து வருகிறது. தேனி மாவட்டம், மயிலாம்பாறை அருகே சிறுகுளம் கண்மாய் உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கண்மாயில் மரம், செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால் போதிய அளவில் தண்ணீரை சேமிக்க முடியாமல் இருந்தது.  கரைகளை பலப்படுத்தி, கன்மாயை தூர்வார வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையையேற்று சில தினங்களுக்கு முன்பு கண்மாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கண்மாய் கரைகள் பலப்படுத்துதல் மற்றும் கண்மாயை தூர்வாரும் பணி துவங்கியது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மஞ்சளாறு உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், ஆண்டிபட்டி பொறியாளர் கணேசமூர்த்தி, மயிலாடும்பாறை விவசாயிகள் சங்க தலைவர் செல்வம், செயலாளர் காமையமசாமி, பெருமாள்சாமி, விவசாய நிர்வாகக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : shore ,Varshanad , Year-round
× RELATED மஞ்சூர் -தங்காடு சாலையில் மரங்கள்...