×

வெட்டுக்கிளி தாக்குதல் எதிரொலி.: பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். உலக முழுவதும் கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பதிப்பில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் இந்திய மக்களுக்கு ஒரு புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது.

வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்தன. இவை உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன.

இது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஹரியானா மாநிலம் குருகிராமில் பெரும் திரளாக வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வெளியிலும், தெருக்களிலும், சாலைகளிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.  

இந்த பாலைவன வெட்டுக் கிளிகளால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை என விசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாலைவன வெட்டுக் கிளிகள் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : grasshopper attack ,Rahul Gandhi ,states ,government , grasshopper ,Rahul Gandhi, central government,ffected ,states
× RELATED சொல்லிட்டாங்க…