×

கொரோனா அச்சத்தில் வேலைக்கு சேராத 40% செவிலியர்கள்: சுகாதாரத்துறை திணறல்

சென்னை: கொரோனா அச்சத்தில் பணிநியமன ஆணை வழங்கியும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில் சேரவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் நகர, கிராமப்பகுதிகளில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசியன்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்காக இரு கட்டங்களாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை தமிழக அரசு தேர்வு செய்தது.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணை அனுப்பட்டது. குறிப்பாக கொரோனா அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா அச்சத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில் சேரவில்லை. இதனால் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் தேர்வெழுதி தேர்ச்சிபெற்ற செவிலியர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டு 3 நாட்களுக்குள் பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயிர் பாதுகாப்பு கருதி பணியில் சேர்வதற்கு அதிகமானோர் தயக்கம் காட்டி வருவதால் கொரோனா வார்டுகளை நிர்வகிப்பதற்கு சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.



Tags : nurses ,Corona , Nurses, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...