×

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் இளைஞர்கள்.: புளோரிடா கவர்னர் குற்றச்சாட்டு

புளோரிடா: அமெரிக்காவில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் மரணத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் ஏராளமானோர் சமூக இடைவெளி கடைபிடிக்கலாம் கலந்துகொண்டதே கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம் என புளோரிடா கவர்னர் Rick Desantis  குற்றம் சாட்டியுள்ளார்.  சீனாவில் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 25,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் பாதிப்பு குறித்து புளோரிடா கவர்னர் Rick Desantis கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, கருப்பினத்தவரின் மரணத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் ஏராளமானோர் சமூக இடைவெளி கடைபிடிக்கலாம் கலந்துகொண்டதே கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம். அதே சமயம் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தாததும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்காததுமே கொரோனா பாதிப்பை அதிகரித்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். 


Tags : governor ,Florida ,US , Young ,cause , corona,,United States, Florida ,governor, indictment
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...