×

சென்னையில் தின்னர், டர்பன் தயாரிக்கும் ரசாயன ஆலையில் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறல்..!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் தின்னர், டர்பன் உள்ளிட்டவை  தயாரிக்கும் ரசாயன ஆலையில் திடீரெனெ தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் சி.ஆர்.டி. நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இங்கு தின்னர், டர்பன் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இந்த ரசாயன ஆலையானது மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலையின் வெளிப்புறத்தில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதிலிருந்து வெளிப்பட்ட தீயானது ஆலை முழுவதுமாக பரவ தொடங்கியது. தொடர்ந்து, விபத்து நேரிட்ட சில வினாடிகளிலேயே அப்பகுதி மக்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயை அணைப்பதற்காக செங்குன்றம், மணலி, அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் தீயினை கட்டுப்படுத்துவது என்பது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. இவை ரசாயன ஆலை என்பதால் ஆலை  முழுவதுமாக கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். ஒருபுறம் தீயை கட்டுப்படுத்துவதில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நுரையை கொண்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்னும் சிலமணி நேரங்களில் தீ முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : chemical plant ,Durban Fire ,Thirunar ,Durban , Chennai, Thinner, Durban, chemical plant, fire
× RELATED குஜாராத் மாநிலத்தில் வேதிப்பொருள்...