×

மதுரை மேலூர் பகுதியிலும் நாளை எந்தவிதத் தளர்வும் இல்லாமல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்: நகராட்சி ஆணையர் அறிவிப்பு

மதுரை: மேலூர் பகுதியில் நாளை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். மேலூர் பகுதியில் 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு எந்தவிதத் தளர்வும் இல்லாமல் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகள் போன்றவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்தவித தளர்வும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்றும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளையும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கு எந்தவித தளர்வும் இல்லாமல் அமல்படுத்தப்படுகிறது.

மதுரையில் முழு ஊரடங்கு எந்தவிதத் தளர்வும் இல்லாமல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் ஆகிய 3 முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளை கண்காணிக்க ஏற்கனவே 6 சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



Tags : shutdown ,commissioner ,Madurai ,Corona ,Melur , Madurai, Melur, Corona
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...