×

கொரோனா ஊரடங்கில் அத்துமீறும் போலீசார்: அப்பாவி மக்களை அடித்து, உதைக்கும் போக்கு..தமிழகத்தில் பரவலாக நடக்கும் துன்புறுத்தல்கள்!

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் பரவலாக நடப்பதே இதற்கு காரணமாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் உயிரிழப்புக்கு போலீசே காரணம் என்பது புகார். கொரோனா காவல் பணியின்போது அத்துமீறி நடப்பது காவல்துறைக்கு புதிதல்ல. கையில் உருட்டு பைப்புடன் சுற்றி வளைத்து போலீசாரின் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் கொடிய குற்றம் செய்தவர் அல்ல. ஊரடங்கு காலத்தில் திறந்திருந்த டாஸ்மாக் கடைக்கு செல்ல முயன்ற மதுபிரியர் ஆவார்.

சென்னை அருகே மீஞ்சூரில் கடந்த 18ம் தேதி அரங்கேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதேபோல், இரவு 8 மணிக்குள் தள்ளுவண்டி டிபன் கடையை அப்புறப்படுத்த தவறிய பெண்ணை போலீசார் கண்மூடித்தனமாக கண்டிக்கும் சம்பவம் கோவை ரத்தினபுரியில் நடந்தது. தாயாருடன் வாக்குவாதம் செய்ததை பார்த்த சிறுவன் போலீசாரின் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுக்க கைகலப்பு ஏற்பட்டது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் பணிக்கு சென்ற மின் ஊழியர்களை தடுத்து காவல்துறையினர் தரக்குறைவாக பேசினார் என்பதும் புகாராக உள்ளது. அதனால் வேதனையடைந்த லோகநாதன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஆடு தவிர்க்கப்பட வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியுள்ளது. பேரிடர் காலத்தில் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை மேலும் துயரத்திற்கு உட்படுத்தக்கூடாது என்று ஒய்வு பெட்ரா காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி கூறியுள்ளார். தொற்று பரவலை தடுக்க காவல்துறைக்கு மக்கள் துணை நிற்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதே காவல்துறையின் பணியாகும். அதை விடுத்து அடி, உதை, அத்துமீறல் போக்கே சர்ச்சையாகி வருகிறது. அதனை கைவிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Tags : Corona Curfew ,Corona ,Tamil Nadu , Corona, curfew, police, trespass
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...