×

இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்?: லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தான் ஒட்டிய எல்லையை குறிவைக்கும் சீனா....!

பெய்ஜிங்: இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறிவைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மாரை ஒட்டிய இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. இதனை காரணமாக வைத்து அங்கு விமான நிலையம், ரயில்
பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்து வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் சீன எல்லை பகுதியில், கட்டுமான பணிகளில் 30 சீன நிறுவனங்களை ஈடுபடுத்தியிருக்கிறது.

அத்துடன் ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 2,500 சீன நிபுணர்கள், எல்லையில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் எல்லைக்கு 8 கிலோ மீட்டர் தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக சீன அரசின் தேசிய என்ஜினீயரிங் நிறுவனம் உட்பட பெரிய நிறுவனங்கள் எல்லையை ஆக்கிரமித்துள்ளன. தனது நிறுவனங்களின் பாதுகாப்புக்காக சொந்த பிராந்தியத்தையே சீனா உருவாக்கியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்கள் கொடுத்து சீனாவும் தன்னை ராணுவ ரீதியாக அப்பகுதியில் பலப்படுத்தி வருகிறது. இந்தியாவை சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதால் மத்திய அரசு, தனது  முழு கவனத்தையும் ராஜஸ்தான் எல்லைப் பக்கம் திருப்ப வேண்டும் என்று ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

Tags : India ,Rajasthan ,Target ,Ladakh China , India, Ladakh, Rajasthan, China
× RELATED ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூடுகிறது?