×

இந்தியாவில் 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை: மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 4 மாநிலங்களில் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரேநாளில் 381 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து  295,917 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டும் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலத்தில், மருத்துவ பரிசோதனை வசதிகளோ, சிறப்பு மருத்துவமனைகளோ இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் தொற்று பாதிப்பால் வெறும் 12 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களிலும் இதுவரை கொரோனாவால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, 4 மாநிலங்களிலும் 42 பரிசோதனை கூடங்கள், கொரோனா சிகிச்சைக்காக 60 மருத்துவமனைகள், 360 சுகாதார மையங்கள் மற்றும் பராமரிப்பு மையங்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Deaths ,States ,India ,government ,Corona , India, Corona, Fatalities, Central Government
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்