×

கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நாமக்கல்: கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 957 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு 90 நாட்களைத் தாண்டி விட்டது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகமானோருக்குப் பரவி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போதைய நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லைதமிழகத்தில் தற்போதைய நிலையில் சூழலில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை. கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை 2 நாட்களுக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும் என்று  கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்புடையதா? அல்லது மனரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : schools ,Senkottiyan ,corona spread situation ,corona spread , Tamilnadu, Schools, Minister Sengotaiyan, Online Class
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...