×

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைவோரின் மீட்பு விகிதமானது 58%க்கும் அதிகமாக உள்ளது: ஹர்ஷ்வர்தன் பேட்டி

டெல்லி: இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19 நாட்களில் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைவோரின் மீட்பு விகிதமானது 58%க்கும் அதிகமாக உள்ளது என்றும் ஹர்ஷ்வர்தன் பேட்டியளித்துள்ளார். ஏறத்தாழ 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 3%ஆக உள்ளது. இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 5,26,296 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,96,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 16,092 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில் 1,48,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 78,267 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 73,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 29,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 20,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Tags : Harshvardhan ,India ,interview ,Corona , Harshvardhan, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!