×

கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வுத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி: தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடகத்தில் தேர்வுத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பவகாடா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மையத்தில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். அதிகாரிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவருக்கும் முழு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா பேரிடர் மற்றும் தேர்வுகள் தள்ளிப்போனதால் மாணவர்கள் மிகுந்த மனா உளைச்சலுடன் உள்ளனர். இப்படி ஒரு மோசமான சூழலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பேராபத்தை விளைவிக்கும் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : officer ,Karnataka ,exam centers ,class officer , Karnataka, Selection Officer, Corona, Selection Centers
× RELATED சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு