×

கொரோனா பாதித்த பகுதிகளை கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

புழல்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி புழல் ஒன்றியம் புள்ளிலைன்  தீர்த்தங்கரைபட்டு, விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், கிரான்ட் லைன், அழிஞ்சிவாக்கம், வடகரை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஏராளமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட 8 பேர் கொரோனாவால்  இறந்துள்ளனர். இதேபோல், செங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்ளிட்ட  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா நேற்று நாரவாரிக்குப்பம் மற்றும் புள்ளிலைன் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும், மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினிகள் தெளித்து மேலும், தொற்று பரவாமல் தடுக்க உடனுக்குடன் அந்தந்தப் பகுதியில் சென்று சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது செங்குன்றம் வருவாய் துறை ஆய்வாளர் ஜெய்கர் பிரபு மற்றும் வருவாய்த்துறை பேரூராட்சிதுறை அலுவலர்கள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


Tags : areas ,Corona , Quaternary outbreak , areas affected , corona
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்