×

திருநின்றவூர் பேரூராட்சியில் மின் மோட்டார் சீரமைப்பு

திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், முருகேசன் நகர், அந்தோணி நகர், என்ஜிஓ நகர், லட்சுமிபுரம், தாசரதபுரம், அம்பிகாபுரம், வச்சலாபுரம், சாமி நகர், தாமோதரன் நகர், கன்னியப்பன் நகர், சி.டி.எச் சாலை ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்தும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிக்கு முருகேசன் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டி மூலம் தெருக்களில் குழாய் வழியாக குடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் குடிநீரை பெற்று பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த பகுதிக்கு கடந்த இரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர். இதனால், குடியிருப்போர் கேன் வாட்டர் மூலம் ₹35க்கு குடிநீரை கடைகளில் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

ஊரடங்கு நேரத்தில் வருவாய் இன்றி தவிக்கும் ஏழை மக்கள்   குடிநீருக்காக தினமும் ₹70 வரை செலவு செய்ய வேண்டிய அவல நிலை இருந்தது. மேலும், சிலர் பக்கத்து கிராமங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் சென்று குடங்களில் தண்ணீரை எடுத்து வந்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி  வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேருராட்சி அதிகாரிகள் குடிநீர் சப்ளையாகும் கொமக்கன்பேடு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பழுதாகி கிடந்த மின் மோட்டாரை சீரமைத்தனர். பின்னர், மேற்கண்ட அனைத்து பகுதிகளுக்கு மேல்நிலை தொட்டி மூலம் நேற்று காலை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்தனர். மேலும், திருநின்றவூர் பகுதிக்கு குடிநீர் கிடைத்திட வழிவகை செய்த தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Electrical Motor ,Alignment
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...