×

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக இடைநிலை ஆசிரியர்களுக்கு தலா ரூ5 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கல்வி மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு,  ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலின்படி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில்  ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலின்படி  பதவி உயர்வு வழங்க தமிழ்மொழி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள்  எதிர்த்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று  5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இதனால், 5 ஆண்டுகளாக பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இதற்கிடையில், சமீபத்தில்  மற்ற பகுதிகளில் நடைபெறும் ஒருங்கிணைந்த  முன்னுரிமை பட்டியலின்படி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பை மறைத்து புதியதாக வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு தீர்ப்பு மூடி மறைத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் செயல்பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு  தலா ₹5 ஆயிரம்  அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Tags : teachers , Inter-school, teachers, fined Rs.5000
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்