×

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீனு (எ) சீனிவாசன் (42). பிரபல கஞ்சா வியாபாரி. இவர் மீது கும்மிடிப்பூண்டி, சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து கும்மிடிப்பூண்டிக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  அரவிந்தன், கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆகியோர் பரிந்துரைப்படி  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், குண்டர் சட்டத்தில் சீனிவாசனை அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் சீனிவாசனை குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Cannabis dealer ,dealer , Cannabis ,dealer, arrested
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி