×

தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. 


Tags : Districts ,Meteorological Overlay Chance of Heavy Rain ,Heavy Rain: Meteorological Department , Southwest Monsoon, Atmospheric Overlap,Heavy Rain ,4 Districts, Meteorological Department
× RELATED தேனியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்...