×

தா.பழூர் அருகே ஜல்லி பெயர்ந்து சேதமடைந்த 2 கி.மீ தூர இணைப்பு சாலை-இது உங்க ஏரியா

தா.பழூர் ஏப்ரல் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வாழைக்குறிச்சி, பாலசுந்தரபுரத்தை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை 2 கி.மீ. தூரம் கொண்டது. இந்த சாலை தாதம்பேட்டை, கூத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மதனத்தூர் வழியாக கும்பகோணம் செல்ல இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை பயன்படுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் போக்குவரத்துக்கு பயணிக்கும் தூரமும் குறைவாகவும் உள்ளது.மேலும் இந்த சாலையை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் இருபுறங்களிலும் அதிகப்படியாக விவசாய நிலங்களே உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு உரம், விதை உள்ளிட்டவைகள் கொண்டு வருவதற்கு விவசாயிகள் இந்த சாலையை பெரிதளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விளைவித்த உணவுப்பொருட்களை விற்பனைக்காக வெளியே கொண்டு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். வாழைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனங்கள் வழியாக தா.பழூர் கடைவீதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்த சாலையின் நடுவே விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதற்கு இரண்டு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் பள்ளமாக உள்ளதால் வாகனங்கள் தடுமாறி பள்ளத்தில் சத்தமாக விழுந்து செல்கிறது. இதனால் வாகன சேதாரமும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.எனவே பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தா.பழூர் அருகே ஜல்லி பெயர்ந்து சேதமடைந்த 2 கி.மீ தூர இணைப்பு சாலை-இது உங்க ஏரியா appeared first on Dinakaran.

Tags : Bhaur ,Tha.Balur ,Vazaikurichi ,Balasundarapuram ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED அனுமதி இன்றி மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்