×

இந்திய -சீன எல்லை பிரச்னையில் ராகுல் கேள்விக்கு மத்திய அரசால் பதில் சொல்ல முடியவில்லை: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செனாய் நகரில் காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: சீன- இந்திய எல்லையில் நடந்த தாக்குதல் குறித்து தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆனால் அவரது எந்த கேள்விக்கும் இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.  லடாக் விவகாரம் ஒரு மர்மமாகவே உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் போல் யோசித்து செயல்பட வேண்டும். அதை தவிர்த்து திமுகவால் நோய் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கிறது என முதல்வர் கூறுவது முறையல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rahul ,Indo-China ,government ,border ,interview ,Tirunavukkarasar , Indo-China border, issue, Tirunavukkarasar, interview
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்