×

கொரோனா அச்சத்தால் போடிக்கு குடிபெயர்ந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்

போடி: சொந்த ஊரான பெரியகுளத்தில் கொரோனா வேகமாக பரவுவதை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு குடி பெயர்ந்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், போடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது சொந்த ஊர் பெரியகுளம். தற்போது பெரியகுளத்தில் கொரோனா தொற்று வேகமாகல் பரவி வருவதால், அந்த நகராட்சி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தேனி மாவட்டம் வந்தால் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொரோனா அச்சத்தால், போடி சுப்புராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அவரது அலுவலகம் அதே பகுதியில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

Tags : Corona ,deputy ,Bodi ,CM OPS ,Deputy Chief Minister , Corona, podie , Deputy Chief Minister, OPS
× RELATED தமிழகத்தில் கொரோனா அச்சம் நீங்கி...